என் வளர்ச்சிக்கு காரணம் என் மனைவி தான்….. கலங்கிய விஜய் TV கோபிநாத்!

Author:
4 October 2024, 9:56 am

விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் உலகம் முழுக்க உள்ள தமிழர்களிடையே மிகப்பெரிய அளவில் பேமஸான தொகுப்பாளராக பார்க்கப்பட்டவர் தான் கோபிநாத். இவர் முதன் முதலில் ரேடியோ ஜாக்கியாக தனது பணியை தொடங்கி அதன் பிறகு தொலைக்காட்சி தொகுப்பாளராக மாறினார்.

Neeya Naana Gopinath

அறந்தாங்கியில் பிறந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளராக தன்னுடைய தனித்துவமான பேச்சாலும் நேர்மையான நியாயமான கருத்துக்களாலும் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் உலகம் முழுக்க உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்த கோபிநாத்துக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். இவர் துர்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .

இதையும் படியுங்கள்:அதுக்கு ஏன் என்ன கூப்பிட்டீங்க? விருது விழாவில் சிரிச்சிட்டே செஞ்சி விட்ட நடிகை மீனா!

Neeya Naana Gopinath Family

இவருக்கு வெண்பா என்ற ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வளர்ச்சி குறித்தும் அதில் தனது மனைவியின் பங்களிப்பு குறித்து மிகவும் எமோஷ்னலாக பேசியிருக்கிறார். கோபிநாத் .

அதாவது என்னுடைய வளர்ச்சிக்கு முழு காரணமே என்னுடைய மனைவிதான் எல்லோரும் பொண்டாட்டிய அம்மா மாதிரி பார்க்கிறேன் அப்படின்னு சொல்வாங்க. ஆனால் நான் என்னோட பொண்டாட்டி அப்பாவா தான் பார்க்கிறேன் என்று மனைவி பற்றி மிகவும் உருக்கமாக பேசினார் கோபிநாத்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!