TTF வாசனை போல பைக் சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி பிரபலம்.. போலீஸ் எடுக்க போகும் அதிரடி நடவடிக்கை என்ன..?

Author: Vignesh
3 October 2022, 4:30 pm

விஜய் டிவி புகழ் ஹெல்மட் அணியாமல் இருப்பது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் தான், ஜிபி முத்துவை இரு சக்கர வாகனத்தில் வைத்து அதி வேகமாக பைக் ஓட்டிய வழக்கில் யூட்யூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் காது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விஜய் டிவி மூலம் பிரபலமான புகழ் தற்போது ஹெல்மட் அணியாகாமல் வேகமாக பைக் ஓட்டி அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் வடிவேல் பாலாஜியின் டீமில் இடம் பெற்று ரசிகர்களை மகிழ்வித்து வந்த புகழ். குக் வித் கோமாளி மூலம் மிகப் பிரபலமாகிவிட்டார். இவருக்கு தனியாக பேன்ஸ் பேஸே உருவாகிவிட்டது. அந்த நிகழ்ச்சி மூலம் அதிக ரசிகர் பட்டாளத்தை வென்ற புகழ் தற்போது படங்களிலும் நடித்த வருகிறார். சமீபத்தில் தான் தனது காதலியை பல மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இது குறித்த விமர்சனங்களும் எழுந்தது.

இந்நிலையில் புகழ் பைக் ஓட்டும் வீடியோ பேசும் பொருளாக மாறி உள்ளது. பிரபலங்கள் எதை செய்தாலும் ரசிகர்கள் அவர்களை பின்தொடர்வார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே தான். இவ்வாறு இருக்க புகழ் தனது பைக்கில் ஹெட்மெட் அணியாமல் வேகமாக வருகிறார். வரும்போதே தனது குல்லாவை கழட்டிவிட்டு அதே வேகத்தில் செல்லும் காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் அவர் ஹெல்மட் அணியாமல் இருப்பது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?