மனைவி சங்கீதாவுடன் ‘வாரிசு’ படம் பார்க்க வந்த விஜய் : கோபமாக கிளம்பியதற்கு இது தான் காரணமாம்..!

Author: Vignesh
11 January 2023, 1:00 pm

இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

vijay - updatenews360 k

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வாரிசு வெளியானது.

vijay - updatenews360 g

இந்த நிலையில் வாரிசு படத்தை தன்னுடைய மனைவி சங்கீதாவுடன் நடிகர் விஜய் மயிலாப்பூரில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தின் திரையரங்கில் பார்க்க திட்டமிட்டு இருந்தார். அந்த திரையிடல் நேரம் என்ன? எப்போது வரவேண்டும்? என்ற தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் கூறிய நேரத்தில் நடிகர் விஜய் தன்னுடைய மனைவியுடன் அந்த திரையரங்கிற்கு வருகை தந்துள்ளார்.

Vijay SAngeetha - Updatenews360

ஆனால் படத்தின் மிக்ஸிங் இன்னும் முடியவில்லை, இரண்டு மணி நேரம் ஆகும் என்று தெரிவித்த நிலையில், நான் சொன்ன நேரத்திற்கு வந்து விட்டேன் என்றும், ஏன் படத்தை இன்னும் தயார் செய்யவில்லை என்று நடிகர் விஜய் கோபப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் பிறகு காத்திருந்த விஜய் வாரிசு திரைப்படத்தை பார்த்துவிட்டு சென்றாராம். நடிகர் விஜய்க்கு திரையிட்ட காட்சி இரவு 8:30 மணி அளவில் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

vijay - updatenews360

இதற்கிடையில் விஜய் – சங்கீதா 22 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்து விவாகரத்து பெற்றுவிட்டதாக வதந்தி செய்திகள் பரவிய நிலையில், விவாகரத்து வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்தார் விஜய் என்று பலர் கூறி மகிழ்ச்சியுடன் வாரிசு படத்தினை கொண்டாடி வருகிறார்கள்.

  • Sivakarthikeyan Surya Connection 10 வருடம் கழித்து பாருங்க….சூர்யாவிடம் சவால் விட்ட சிவகார்த்திகேயன்..!
  • Views: - 2352

    102

    33