நம்ப வச்சு கழுத்தறுத்த விஜய்…! ஏத்தி விட்ட ஏணியை மறக்கலாமா..? கை கொடுத்து தூக்கி விட்ட பிரபல நடிகர்..!

Author: Vignesh
1 December 2022, 7:00 pm
dhanush_selvaraghavan_updatenews360
Quick Share

தளபதி விஜய் வம்சியின் இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் போஸ்ட் ப்ரடக்சன் பணியில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த திரைப்படத்தை அடுத்த வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட இருக்கிறார்கள் பட குழு.

vijay - updatenews360.jpg 3

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது மாஸ்டர் படத்தின் வெற்றி கூட்டணிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைவதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீப காலமாக தோல்விகளை சந்தித்து வந்த தனுஷ் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளார் அதனை தொடர்ந்து அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றது.

Dhanush updatenews360 2

தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் இந்த திரைப்படம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது. இன்று தளபதி விஜய் புகழின் உச்சத்திலும் வெற்றிகளை குவித்து வருகிறார் ஆனால் இவருக்கு முதன் முதலாக வெற்றி படத்தை கொடுத்தது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தான்.

Vijay - Updatenews360

பூவே உனக்காக என்ற திரைப்படத்தின் மூலம் விஜய் வெற்றி நாயகனாக மாறினார் ஆர்பி சவுத்ரி இதனைத் தொடர்ந்து விஜயின் பல திரைப்படங்களை தயாரித்தார். லவ் டுடே, ஷாஜகான், திருப்பாச்சி என பல வெற்றி திரைப்படங்களை விஜய்க்கு கொடுத்துள்ளார் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 100வது திரைப்படத்தில் விஜய் நடிப்பார் என பேசப்பட்டு வந்தது ஆனால் சமீபத்தில் வந்த தகவலின் படி சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கவில்லை என தகவல் கிடைத்துள்ளது.

dhanush -updatenews360-1

அதுமட்டுமில்லாமல் ஒரு சில காரணங்களால் தான் விஜய் நடிக்க முடியாது என கூறிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் நூறாவது திரைப்படத்தில் உள்ள விஜய் நடிக்காததை அடுத்து தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் போன்ற ஒரு பாரம்பரியமான தயாரிப்பு நிறுவனத்தின் 100 ஆவது திரைப்படத்தின் நடிப்பதற்கு மிகவும் ஆசையாக இருக்கிறது என தனுஷ் கூறியுள்ளார் எனவே ஆர் பி சவுத்ரி அழைத்ததும் தனுஷ் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 275

7

2