நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா எங்கே?… மீடியாவுக்கு தீனி போட்ட வைரல் வீடியோ..!

Author: Vignesh
14 July 2023, 1:30 pm

நடிகர் விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே, பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் சங்கீதா வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு மகன் மற்றும் மகளுடன் சென்றுவிட்டார் என்றும் தகவல் வெளியாகி சோசியல் மீடியாவை பதம் பார்த்தது.

அதுமட்டுமல்லாமல், நடிகையின் மேல் உள்ள காதல்தான் காரணம் என்றும், அந்த நடிகையுடன் விஜய்க்கு தவறான உறவு உள்ளது என்றும், இதை அறிந்து தான் சங்கீதா சென்று விட்டதாக சர்ச்சைக்குரிய தகவல் பரவியது.

ஆனால், அது உண்மையில்லை. அந்த நடிகை தனது நீண்ட கால காதலரை தான் இன்னும் 4 வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொள்ள போகிறார் என தகவல் வெளிவந்தது.இதன்பின் அந்த நடிகைக்கும் விஜய்க்கும் இடையே எந்த ஒரு தவறான உறவும் இல்லை என கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகர் விஜய்க்கும், அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லையாம். விஜய்யும் அவருடைய மனைவி சங்கீதாவும் சென்னையில் உள்ள வீட்டில் தான் இருக்கிறார்கள்.

சங்கீதா வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு செல்லவில்லை என பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இதன்முலம் பலநாள் சர்ச்சைக்கு ஒரு முடிவு கிடைத்தது.

vijay sangeetha - updatenews360

மேலும், கடந்த சில வருடங்களாக விஜய் தன் பெற்றோர்களை கைவிட்டார் என்றும், அவர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு சங்கீதா தான் காரணம் என்றும், செய்திகள் வெளியாகி வருகிறது.

நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெளிநாட்டில் அப்பா வீட்டுக்கு சென்று விட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், சங்கீதா விஜய் பல மாதங்களுக்கு பின் வெளியில் தலைகாட்டியுள்ளார்.

சிவகார்த்திகேயன் அதிதி நடிப்பில் வெளியாகியுள்ள மாவீரன் படத்தினை பார்க்க விஜயின் மனைவி சங்கீதா பிரபல திரையரங்கிற்கு வந்துள்ளார். மேலும் சங்கர் குடும்பத்தினருக்கு சங்கீதா மிகவும் நெருக்கமானவர் என்பதால் தான் சென்றுள்ளதாகவும், ஏற்கனவே அதிதி சங்கர் நடித்த விருமன் படத்தினை பார்க்க சங்கீதா சென்றது குறிப்பிடத்தக்கது. அங்கு எடுத்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • paresh rawal drank urine for leg injury ச்சீ இப்படி ஒரு வைத்தியமா? காயத்திற்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை தானே குடித்த சூர்யா பட நடிகர்!