இன்ஸ்டாகிராமில் சேர்ந்த 2 மணி நேரத்தில் விஜய் செய்த சாதனை.. இங்கேயும் ஆரம்பிச்சிட்டாங்களா?!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2023, 6:02 pm

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வாரிசு திரப்படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

நடிகர் விஜய் சமூக வலைதள பக்கங்களில் டுவிட்டர் கணக்கை மட்டும் கொண்டிருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் மற்றொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது அக்கவுண்டை தொடங்கி உள்ளார்.

ஒரே ஒரு போஸ்ட் போட்டு ஹலோ நண்பாஸ் அண்ட் நண்பிஸ் என பதிவிட்டுள்ளார். 2 மணி நேரத்தில் மில்லியன் பாலோவர்கள் பாலோ செய்துள்ளனர்.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?