விஜய்-யின் பீஸ்ட், கே.ஜி.எஃப்-2 படத்துடன் மோதும் பிரபல நடிகர் படம்..! ஜெயிக்கப் போவது யார்.?
Author: Rajesh21 January 2022, 8:21 pm
கடந்த 2018 ஆம் ஆண்டு, நடிகர் யாஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கே.ஜி.எஃப். வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பிரமாண்ட பின்னணி இசையால் ஒவ்வொரு மொழிக்கும் ஏற்ற வசனங்களாலும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும், மாஸ்ஸாக காட்டியிருப்பார் இயக்குனர். தற்போது, இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தின் எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டே வெளியாக இருந்த நிலையில், கொரோனா பிரச்னைகள் காரணமாக ஏப்ரல் 14-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக பிரபல இந்தி நடிகர் அமீர் கானின் லால் சிங் சட்டா படம் வெளியீடு தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏதும் இல்லை என்று படக்குழு அறிவித்துள்ளது.
மேலும், தமிழ், மலையாள சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்து விஜய்யின் பீஸ்ட் படமும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி மூன்று படங்களும் வெளியானால், இந்திய சினிமாவில் மிகப்பெரும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
3
0