விஜய் Uncleனு சொல்லியதில் என்ன தப்பு இருக்கு.. போய் வேலையை பாருங்க… பிரபல இயக்குநர் ஆதரவு!

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2025, 3:36 pm

தவெகவின் 2வது மாநில மாநாடு சமீபத்தில் மதுரை பாரபத்தியில் நடந்து முடிந்தது. ஏராளமான தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசிய பேச்சு அனல் பறந்தது. விஜய் முதலமைச்சர் ஸ்டாலினை Uncle என பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை முன் வைத்தனர். விஜய் அரசியலுக்கு புதிது என்பதால் அவருக்கு பேசவே தெரியவல்லை என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, விஜய் ஸ்டாலின் Uncle என கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்,

அதற்கு பதில் அளித்த அவர், அரசியலில் எனக்கு சம்பந்தம் கிடையாது. எனக்கு அனுபவமும் கிடையாது. விஜய் பேசுவது தப்பா? எனக்கு தப்பா தெரியல. ஏன்னா, அவரு நிஜமாவே நேரில் பார்க்கும்போது, “குட் மார்னிங் அங்கில், வணக்கம். எப்படி இருக்கீங்க?”ன்னு தான் சொல்லுவாரு.

அதை வந்து, இன்னைக்கு பப்ளிக்ல சொல்லிருக்காரு. அப்படி தான் நான் பார்க்கிறேன். அதற்கு வேற மீனிங் எடுத்துக்கிட்டு, வேற மாதிரி ஒரு குரூப் வந்து பேசிக்கிட்டு இருக்காங்க.

அவங்களுக்கு எல்லாம் நான் சொல்றேன், அதை விடுங்க. மத்தபடி, நாட்டுக்கு என்ன நல்லதோ, அதை எப்படி பண்ணனுமோ அதை பண்ணா ஓகே. அது யாரா இருந்தாலும் சரி.

ரெட் ஜெயன்ட்க்கு ரெண்டு படம் பண்ணிருக்கேன்.அந்த நேரத்தில் எல்லாம் ஸ்டாலின் சார் துணை முதலமைச்சரா இருந்தாரு. அவரு வந்து படம் பார்ப்பாரு, நான் நிறைய தடவை மீட் பண்ணிருக்கேன், அவங்க வீட்டுக்கு நிறைய தடவை போயிருக்கேன். நானே வணக்கம் அங்கிள்னு தான் சொல்லுவேன். ஆண்டி எப்படி இருக்கீங்கன்னு தான் சொல்லுவேங்க.

அது வந்து தப்பான வார்த்தையே கிடையாது. விஜய் வந்து, கொஞ்சம் கமர்ஷியல் பண்ணி, அவங்களுடைய ஆடியன்ஸ் இருக்காங்க. அங்க ஃபுல்லா, ஜனங்க பூராம் அவருடைய ஆடியன்ஸ், அவருடைய கூட்டம், அந்த கூட்டத்துக்கு ஜாலி பண்றதுக்காக அப்படி பேசியிருக்கலாம்.

அப்படி பேசுனதாக தான் நான் நினைக்கிறேன். அவரு வந்து, தப்பா ஒருத்தரை குறை சொல்லல. அது குறை சொல்ற வார்த்தையே கிடையாது.

இப்ப அவரு அங்கிள்னு கூப்பிடறாரு, அதுல என்ன தப்பு இருக்கு? அதுல ஒன்னும் தப்பு இல்ல கிடையாது. தமிழ்ல மாமான்னு கூப்பிட்டா வேணா அவரு தப்பாயிரும். அப்படியே அவரு கூப்பிடலையே என கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!