விக்ரம் – கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இணையும் அழகிய தொழில்நுட்ப கலைஞர்!

23 June 2020, 9:06 pm
Quick Share

நடிகர் விக்ரமின் 60 வது திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவார் என்றும், இது ஒரு கேங்க்ஸ்டர் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வ வெளியீடு வந்தது.

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிக்க, அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், இப்போது, ​​இந்த படத்தில் ஒரு திறமை வாய்ந்த இளம் நட்சத்திரம் பணியாற்ற போவதாக அதிகாரப்பூர்வமாக வெளியீடு வந்துள்ளது.

விக்ரமின் 60வது படத்தில், அவள், ஜில் ஜங் ஜக் போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய மற்றும் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த வெளியீடான தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திராமிலும் ஒளிப்பதிவு செய்த ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவும் பணியாற்ற இருக்கிறார். இந்த செய்தியை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா அவரது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

View this post on Instagram

Adutha Padam … Directed by @ksubbaraj #hadtobeinthefeed

A post shared by kshreyaas (@shreyaas_krishna) on