புல்லிங்கோ லுக்கில் Swag’அ இருக்கும் விக்ரம்… அடுத்த படத்துக்கு வேற மாறி ரெடி- வைரல் வீடியோ!

Author: Shree
24 April 2023, 4:34 pm

படத்திற்கு படம் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என பெயரெடுத்தவர் நடிகர் விக்ரம். இவர் தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். என் காதல் கண்மணி படத்தின் மூலம் 1990ல் அறிமுகமானார்.

அதன் பின்னர் தொடர்ந்து பல தோல்வி படங்களில் நடித்து துவண்டுபோன விக்ரமுக்கு சேது படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின்னர் காசி, ஜெமினி, தூள் , பிதாமகன் , அந்நியன் , தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. அதையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கோலார் தங்க சுரங்கம் எப்படி உருவானது, அதில் தங்கலான் எனும் பழங்குடியினர் ( விக்ரம்) பங்கு என்ன என்பதை மையக்கருவாக வைத்து உருவாகியுள்ளது. ‘

இப்படத்திற்காக விக்ரம் நீளமான முடி 80ஸ் காலத்து கட்டுமஸ்தான உடல் தோற்றம் கொண்டு மிரட்டியிருக்குறார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் நிறைவடைந்ததால் தற்போது தங்கலான் கெட்டப்பில் வலம் வருகிறார். இதில் விக்ரம் புல்லிங்கோ தோற்றத்தில் Swag’அ இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

https://www.youtube.com/shorts/F1gNvWbRAQc
  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?