நடிப்புக்கு தீனி போட்ட “பிதாமகன்” – விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Author: Shree
21 March 2023, 7:36 pm
pithamagan
Quick Share

விசித்திர படைப்பாளி பாலா இயக்கத்தில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிதாமகன். இப்படத்தில் சூர்யா , விக்ரம் நடித்திருந்தனர். இதில் விக்ரமின் நடிப்பு காலகாலத்துக்கும் பேசும்படியாக இருந்தது.

இளையராஜவின் இசையில் உருவான இப்படத்தில் லைலா, சங்கீதா ஆகியோர் முதன்மையான பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். விக்ரமின் திரை பயணத்தில் முக்கிய படமாக அமைந்த பிதா மகன் படத்தில் விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்த செய்தி ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஆம், இப்படத்திற்காக விக்ரம் ரூ. 1.25 கோடி சம்பளம் வாங்கினாராம். 2003 காலகட்டத்தில் அது மிகப்பெரிய தொகையாகவே பார்க்கப்பட்டது. அவ்வளவு காசு கொடுத்து செலவு செய்து படமெடுத்த தயாரிப்பாளர் வி.ஏ. துரை தற்போது ரூ. 100க்கே திண்டாடுகிறார் என்பது தான் மிகுந்த வருத்தத்தையும் வேதனையும் அளிக்கிறது.

Views: - 345

2

0