யாரு சாமி இவன்? விக்னேஷ் சிவனை கூவி கூவி விற்பனை செய்த SOFA தம்பி – வைரல் வீடியோ!

Author: Rajesh
3 February 2024, 7:58 pm

சமூகவலைத்தளங்களில் சிறுபிள்ளைகள் செய்யும் பல்வேறு சேட்டைகள் , குறும்புகள், விளையாட்டுத்தனமாக செயல்கள் உள்ளிட்டவை வெளியாகி வைரலாகும். ஆனால், ஒரு படி மேலே சென்று சிறுவன் ஒருவன் தன் அப்பா செய்யும் சோபா தொழிலில் மும்முரமாக இறங்கி தங்களது சோபா தொழில் குறித்தும், சோபாவை விற்பனை செய்ய அவர் பேசும் விளம்பரமும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இணையத்தில் வைரலாகியது.

முஹம்மத் என்ற அந்த சிறுவன் பள்ளியில் படித்துக்கொண்டே சாயங்காலம் முதல் இரவு வரை தனது அப்பாவுக்கு உதவியாக சோபா தொழில் செய்து வருகிறார். அவரது திறமையும் , தொழில் மீது உள்ள அக்கறையும் பலரை வியக்க செய்தது. அவனின் ” நாடி , நரம்பு, சதை , புத்தி எல்லாம் சோபா தான் என பலர் கிண்டல் செய்தாலும் தொழிலில் முன்னேரத்திலே தனது முழு கவனத்தை செலுத்தி வந்தார் சிறுவன் முஹம்மத்.

இந்நிலையில் தான் அவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கும் வைப்பு கிடைத்தது. ஆம், இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் சோபா விற்கும் ஸ்டைலில் படத்தின் cast and crew’வை அறிமுகம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?