சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’: திருச்செந்தூர் படப்பிடிப்பு தளத்தின் வைரல் போட்டோஸ்..!!

Author: Aarthi Sivakumar
9 August 2021, 1:12 pm
Quick Share

திருச்செந்தூர்: சிம்பு நடித்துவரும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக திருச்செந்தூரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Image

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. ஜெயமோகன் கதையில் உருவாகி வரும் இந்த படத்தை திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார் கௌதம் மேனன்.

இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கௌதம் மேனன், ராதிகா மற்றும் சிம்பு இருக்கும் காட்சிகளுடன் கூடிய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

Image

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ரசித்து இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சிம்பு ஏற்கனவே ‘மாநாடு’ படத்திற்காக உடல் இளைத்து இருந்த நிலையில் அதே உடல் எடையுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார் என்பது இந்த புகைப்படத்தில் இருந்து தெரிய வருகிறது. மேலும் இது ஒரு முழுக்க முழுக்க கிராமத்து கதை என்பது ராதிகாவின் காஸ்ட்யூமில் இருந்து தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1085

4

0