வைரலாகும் பிரசாந்த் – சிம்ரன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

Author: Udhayakumar Raman
17 March 2021, 10:43 pm
Quick Share

பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் பட த்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை வரிசையாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு வருட த்திற்கு ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வினய விதேய ராமா என்ற தெலுங்கு படம் வெளியானது. தற்போது, அந்தாதூன் என்ற ஹிந்தி பட த்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப் பட த்திற்கு அந்தகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பிரசாந்தின் அப்பா தியாகராஜன் தான் இந்தப் படத்தை இயக்கி தயாரிக்கிறார். கடந்த 10 ஆம் தேதி இந்தப் பட த்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. அந்தகன் பட த்தில் பிரசாந்துடன் இணைந்து சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். பிரசாந்த் மற்றும் சிம்ரன் இருவரும் இணைந்து கண்ணெதிரே தோன்றினால், பார்த்தேன் ரசித்தேன், ஜோடி, தமிழ், ஜெய் என்று பல படங்களில் நடித்துள்ளனர்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அந்தகன் படத்தில் இணைந்துள்ளனர். அண்மையில், தொடங்கப்பட்ட அந்தகன் பட த்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், சிம்ரன் மற்றும் பிரசாந்த் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 102

8

0