“இப்படி ஒரு அஜித் ரசிகரை பார்த்ததே இல்லை” சில்லுகருப்பட்டி இயக்குனர் வெளியிட்ட வைரல் வீடியோ…!

14 August 2020, 10:28 pm
Quick Share

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் அதிகமாக சாதிப்பதில்லை என்ற ஒரு குறை இருக்கிறது. அது சில்லுக்கருப்பட்டி மூலம் தவிடும்பொடி ஆகியது.

10 + வயது காதல், 20 + வயது காதல், 60 + வயது காதல், காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரின் காதல் என வெவ்வேறு காதலை நம் உணர்வுகளோடு கலந்ததுதான் சில்லு கருப்பட்டி. இந்த படத்தின் இயக்குனர் ஹலீதா ஷமீம், இவர் Starbucks Coffee Shopக்கு சென்றுள்ளார்.

அங்கு ஒரு 75 வயது ஏழை முதியவர் ஜான் மைக்கேல் என்பவரின் ஆங்கில புலமையையும், அஜித் மீதான அன்பையும் கண்டு மெய் சிலிர்த்துள்ளார். அவரின் புல்லரிக்கவைக்கும் காணொளி ஒன்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ” அஜித்குமார் என்னும் நடிகர், செய்யும் எந்த ஒரு உதவியையும் வெளி வெளியே சொல்ல மாட்டா,ர் தற்போதுகூட சினிமா தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வேலை இல்லாமல் இருக்கும் சினிமா ஆட்களுக்கு ஒன்றரை கோடி கொடுத்து உதவியுள்ளார்.அஜித் மேல எல்லோரும் இம்ப்ரஸ் ஆவார்கள், காரணம் அவர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் அவரின் படங்கள் எல்லாம் விரும்பிப் பார்ப்பேன்.

அவரும், அவர் குடும்பமும் மேலும் மேலும் நல்லா இருக்கணும். கடவுள் மனித ரூபத்தில் வந்தவர்தான் அஜித் குமாரும், லாரன்ஸ் மாஸ்டரும் .” என்று அந்த முதியவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். அஜித்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே அவரின் கண்கள் ஆனந்தக் கண்ணீரில் நினைந்ததை நாம் அந்த வீடியோவில் பார்க்கலாம்.

“இப்படி ஒரு அஜித் ரசிகர்களை நான் பார்த்ததே இல்லை” என்று சில்லுக்கருப்பட்டி இயக்குனர் கூறியுள்ளார். இது தல ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக பரவி வருகிறது. இவர் ஏற்கனவே தலையைப் பற்றி யூட்யூபில் பேசி பிரபலமானவர் என்பது கூடுதல் தகவல். கூடிய விரைவில் இவர் அஜித்தை சந்தித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.