என்ன Baby சொல்லிடலாமா? கண் பார்வையால் விஷாலை வெட்கப்பட வைத்த தன்ஷிகா! செம கியூட்…

Author: Prasad
20 May 2025, 10:50 am

கல்யாண தேதியை அறிவித்த விஷால்

50 வயதை நெருங்கி வரும் விஷால் முரட்டு சிங்கிளாகவே தனது காலத்தை தள்ளிக்கொண்டு வந்தார். இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு அதில் வைத்துதான் நான் திருமணம் செய்துகொள்வேன் என கூறினார். 

அந்த வகையில் வருகிற ஆகஸ்து மாதம் நடிகர் சங்க கட்டடத்திற்கு திறப்பு விழா நடைபெறவுள்ள நிலையில் நடிகர் விஷாலின் திருமணம் குறித்த பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று சாய் தன்ஷிகாவுடன் திருமணத்தை உறுதி செய்தார் விஷால்.

vishal and sai dhanshika announced their marriage on stage

என்ன Baby…

சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள “யோகி டா” என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் விஷால். அப்போது மேடையில் பேசிய சாய் தன்ஷிகா, “இந்த மேடையில் நாங்கள் இதனை அறிவிப்போம் என்று சத்தியமாக நினைக்கவில்லை. 15 வருடங்களாக நாங்கள் நண்பர்களாக பழகி வந்தோம். இப்படியே இருந்துவிடலாமா என்று கூட நினைத்தோம். ஆனால் இப்போது வேறு வழியில்லை. சொல்லித்தான் ஆகவேண்டும்” என்று கூறிவிட்டு மேடையில் அமர்ந்திருந்த விஷாலை பார்த்து, “என்ன பேபி, சொல்லிடலாமா?” என்று செல்லமாக  கேட்டார். 

vishal and sai dhanshika announced their marriage on stage

அதனை கேட்டதும் விஷால் வெட்கப்பட்டு சொல்லிடலாம் என்று தலையாட்டினார். அதன் பின் மீண்டும் பேசத்தொடங்கிய சாய் தன்ஷிகா, “நாங்கள் ஆகஸ்து 29 அன்று திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். எனக்கு 15 வருடங்களாக விஷாலை தெரியும். எப்போதும் மரியாதையோடு நடந்துகொள்வார். சமீபமாகத்தான் பேச ஆரம்பித்தோம். பேச ஆரம்பித்தபோதுதான் எங்களுக்குள் காதல் மலர்ந்துவிட்டது” என கூறினார்.

விஷால்-சாய் தன்ஷிகா திருமண அறிவிப்பு ரசிகர்கள் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

  • suriya 46 movie silet producer is gnanavel raja படம் ஃபிளாப் ஆனதால் தலைமறைவாக சூர்யா படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்? அடப்பாவமே!
  • Leave a Reply