நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப்போறோம்- பொது மேடையில் அறிவிக்கும் விஷால்?

Author: Prasad
19 May 2025, 3:49 pm

குறிக்கோளுக்கு அப்புறம்தான் கல்யாணம்…

நடிகர் சங்க கட்டிடத்திற்கு திறப்பு விழா நடத்தி அந்த கட்டிடத்தில்தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக முடிவெடுத்திருந்தார் விஷால். அந்த வகையில் வருகிற ஆகஸ்து மாதம் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஷால் யாரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்பது குறித்தான பேச்சுக்களும் அடிபடத் துவங்கிவிட்டன. இந்த நிலையில் தற்போது விஷாலின் திருமணம் குறித்து ஒரு ஆச்சரியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

vishal and sai dhanshika are going to marry

இந்த நடிகையா?

அதாவது நடிகர் விஷால், பிரபல நடிகையான சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துகொள்ளப்போகிறாராம்.  சாய் தன்ஷிகா நடித்துள்ள “யோகி டா” திரைப்படத்தின் விழா இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். இந்த விழாவில் விஷால், சாய் தன்ஷிகாவுடனான தனது திருமணத்தை குறித்து அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

vishal and sai dhanshika are going to marry

“பேராண்மை”, “அரவாண்”, “பரதேசி”, “கபாலி” போன்ற திரைப்படங்களின் மூலம் மிகப் பிரபலமடைந்தவர் சாய் தன்ஷிகா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஷாலும் சாய் தன்ஷிகாவும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. 

  • tiruppur subramaniam challenge suriya fans that give me a name of one hit film of suriya after jai bhim சூர்யாவோட ஒரு படம் கூட ஹிட் அடிக்கல- ரசிகர்களை வாண்டடாக வம்பிழுத்த பிரபலம்!
  • Leave a Reply