திருமண பத்திரிகையுடன் வந்த விஷால்.. சுத்திப் போட்ட பிரபலங்கள்.. வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2025, 4:20 pm

நடிகர் விஷாலுக்க 47 வயதாகிறது. ஆனால் அவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. இதனால் அவரை பார்க்கும் இடங்களில் எல்லாம், எப்போது உங்கள் திருமணம் என ஒரு கூட்டம் அலைமோதும்.

அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷால், எனக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. நடிகர் சங்க கட்டிடம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திறக்கப்படுகிறது. அது முடிந்தததும் அன்றைய மாதமே என்னுடை திருமணம் நடக்கும். பெண் யார் என்று அறிவிப்பேன் என கூறியிருந்தார்.

திடீரென சென்னையில் நடந்த யோகி டா பிரமோஷன் நிகழ்ச்சியின் போது, நடிகை தன்ஷிகாவை காதலிப்பதாக மேடையில் விஷால் அறிவித்தார். இரண்டு பேருமே தங்கள் திருமணம் குறித்த பொது வெளியில் அறிவித்தனர்.

பெரும் பரபரப்பாக பேசப்பட்ட இவர்களின் காதல். ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்ய போவதாக இருவரும் அந்த மேடையில் அறிவித்தனர். அதன்படி, தற்போது பத்திரிகைகளை அடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு இருவரும் கொடுத்து வருகின்றனர்.

இருவரும் சேர்ந்து பத்திரிகைகளை வைத்து வரும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் தனது நண்பருமான எம்பி விஜய் வசந்த்தை, விஷால் கட்டியணைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!