வீரமே வாகை சூடும் பட வசூல்..! அச்சத்தில் அதிரடி முடிவு எடுத்த விஷால்..!

Author: Rajesh
7 February 2022, 2:02 pm
Vishal - updatenews360-1
Quick Share

விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் வீரமே வாகை சூடும். பல பிரச்சனைகளுக்கு பிறகு வெளயான இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதனிடையே இந்த படத்தின் மொத்த பட்ஜெ;ட் 20 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் வெளியாகி 3 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை ரூ.5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே விமர்சன ரீதியாகவும், பட வசூல் ரீதியாகவும் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விஷாலுக்கு ஒரு படம் சக்சஸ் கொடுத்தாக வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, விஷால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் துப்பறிவாளன். இந்த படத்தின் 2 பாகம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது இயக்குனர் மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரிய சண்டையாக மாறியது.
இந்த நிலையில், மிஷ்கின் ஒரு பேட்டியில் விஷாலை பற்றி நல்ல விதமாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து, துப்பறிவாளன் 2 திரைப்படம் படத்தை மீண்டும் தொடங்க விஷால் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Views: - 689

1

2