உங்க வீட்ல பெண்களே இல்லையா?.. பயில்வானை கொளுத்த வேண்டும்- ஆவேசத்தில் பொங்கிய விஷால்..!

Author: Vignesh
19 September 2023, 4:30 pm
Quick Share

பொதுவாக சினிமா துறையில் உள்ள நடிகர், நடிகைகளிடையே காதல் கிசுகிசு வருவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில், சமீப காலமாக விஷாலின் திருமணம் குறித்து அடிக்கடி வதந்தி பரவி வருகிறது. இப்போது மீண்டும் அவரது திருமணம் குறித்த வதந்திகள் பரவ தொடங்கியது.

vishal lakshmi menon-updatenews360

நடிகை லட்சுமி மேனனுடன் விஷால் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் வெளியானது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும், விரைவில் குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு செட்டிலாக இருப்பதாகவும், தகவல்கள் வெளியானது.

vishal lakshmi menon-updatenews360

விரைவில், அவர்கள் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை அறிவிப்பார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில், நடிகர் விஷால் தன் திருமணம் குறித்து பரவிக்கொண்டு இருந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

vishal lakshmi menon-updatenews360

அதாவது, அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் பொதுவாக என்னைப் பற்றிய எந்த பொய்யான செய்திக்கும், வதந்திகளுக்கும் நான் பதில் அளிப்பதில்லை என்றும், அது பயனற்றது என்பதை நான் உணர்கிறேன் எனவும், ஆனால் இப்போது லட்சுமி மேனன் உடனான தனது திருமண பற்றிய வதந்தி பரவியது, இதை முற்றிலும் மறுக்கிறேன். இது முற்றிலும் உண்மை மற்றும் ஆதாரமற்றது என்று விளக்கம் அளித்து இருந்தார்.

vishal lakshmi menon-updatenews360

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஷாலிடம் ஒரு ஆடியோ கிளிப் காட்டப்பட்டது. அதில் பயில்வான் விஷால் லட்சுமிமேனனை காதலித்து திருமணம் வரை சென்றது. கடைசியில் நின்று விட்டது என பேசி இருந்தார்.

இதை கேட்ட விஷால் வருகிற போகியன்று பழைய பொருட்களுடன் சேர்ந்து பயில்வனை கொளுத்த வேண்டும் என்பது என் ஆசை. நாம் யாரைப் பற்றியும் பேசலாம். ஆனால், அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. அவருக்கும் மனைவி மகள் இருக்கிறார்கள் தானே. ஒரு பெண்ணை பற்றி இப்படியா பேசுவது என்று விஷால் ஆவேசமாக பேசியிருந்தார்.

Views: - 265

0

0