அனிஷாவுடன் ஏன் திருமணம் நின்றுபோனது – ஒரு வழியாக மனம் திறந்த விஷால் !

1 March 2021, 4:15 pm
Quick Share

நடிகர் விஷாலுக்கும் தெலுகு நடிகையான அனிஷா ரெட்டி என்பவருக்கும் கடந்த வருடம் ஐதராபாத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் விமரிசையாக நடைபெற்றது.

அதன் பிறகு காரணம் எதும் சொல்லாமல் இருவரும் பிரிந்து விட்டார்கள். தற்போது விஷாலுக்காக நிச்சயம் செய்யப்பட்ட அனிஷா ரெட்டிக்கும் வேறொருவருக்கும் சில தினங்களுக்கு முன்பு திருமண நிச்சயம் நடைபெற்றதாகத் தகவல் வெளியானது.

ஒரு நிலையில் தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ள விஷால், “நான் ஒரு இயக்குனராக வரவேண்டும் என்று தான் நினைத்தேன். அதனால் தான் உதவி இயக்குனராக சேர்ந்தேன். நான் என் பயணத்தை துவங்கி 16 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது வரை நன்றாக சென்றுகொண்டு இருக்கிறது.

எனக்கு எந்த திட்டமும் இல்லை, வாழ்க்கையின் போக்கில் விட்டுவிட்டேன். நான் ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. என் திருமணத்தில் என் கைமீறி எதிர்பாராத பல விஷயங்கள் நடந்து விட்டது. நான் இப்போதும் சிங்கிள் தான் மிங்கிளாக ரெடி தான்” என்று கூறியுள்ளார்

Views: - 4463

11

5