சர்ச்சையில் சிக்கும் விஷாலின் சக்ரா: வைரலாகும் புரோமோ வீடியோ!

15 February 2021, 8:15 pm
Quick Share

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். கடந்த 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் படம் வெளியாகியிருந்தது. இந்தப் படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது சக்ரா, துப்பறிவாளன், எனிமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். எம்.எஸ் ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படம் சக்ரா.

இந்தப் படத்தில் விஷாலுடன் இணைந்து ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், கே.ஆர்.விஜயா, ரவிகாந்த், மனோபாலா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மாஸ்டர் படம் திரைக்கு வந்ததைத் தொடர்ந்து ஒவ்வொரு படமாக திரையரங்கிற்கு வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், சந்தானம் நடிப்பில் உருவான பாரிஸ் ஜெயராஜ் படம் திரையில் வெளியானது. இந்தப் படத்திற்கு போதுமான வரவேற்பு பெறவில்லை.

இந்த நிலையில், வரும் 19 ஆம் தேதி விஷால் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள சக்ரா படம் திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு படத்திற்கு விளம்பரம் சேர்க்கும் வகையில், சக்ரா படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அந்த புரோமோவில், மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது,

  1. இந்தியர்களால் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட 900 கோடி கருப்பு பணத்தை மீட்போம் என பாரத பிரதமர் உறுதி.
  2. வங்கிக் கடனை அரசு ரத்து செய்யாததால், காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை.
  3. புதிய சாலை திட்டத்துக்காக பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு. சொந்த நிலங்களில் இருந்து மக்கள் விரட்டியடிப்பு.
    தொடர்ந்து உனக்கு உண்மையில் தைரியம் இருந்தால், இந்த வயதான பெரியவரிடம் காட்டிய அதே கோபத்தையும், வீரத்தையும் இதுல இருக்கிற ஏதாவது ஒரு விஷயத்துல காட்ட முடியுமாடா? துணிச்சல் இருக்கிறதா? அதனை தட்டிக்கூட கேட்க வேண்டாம். ஆனால், அனைவருக்கும் கேட்கும்படி, உன்னால் ஒரு கேள்வி மட்டும் கேட்க முடியுமா? முடியாது. ஏனென்றால் திருப்பி அடிப்பாங்க.
    நம்ம எங்க வீரத்தை காட்டுவோம். அப்பாவி மக்களிடம் தான். இது போன்று மறைமுகமாகவும், நேரடியாகவும் மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கும் வகையில், சக்ரா பட த்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சக்ரா படத்திற்கு சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிட த்தக்கது.

Views: - 27

0

0