இரு வீட்டார் முன்னிலையில் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! விஷால்-சாய் தன்ஷிகா கியூட் ஜோடியை பாருங்க…
Author: Prasad29 August 2025, 1:52 pm
திடீரென காதலை அறிவித்த ஜோடி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு திரைப்பட விழாவில் நடிகை சாய் தன்ஷிகாவும் விஷாலும் தங்களின் காதலை அறிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே விஷால் நடிகர் சங்க கட்டிடம் திறந்த பிறகுதான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்தார். அந்த வகையில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறும் எனவும் அன்றைய நாளில் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அவர்கள் அறிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து சொன்ன தேதியில் திருமணம் நடைபெறுமா? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு விஷாலிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது “ஆகஸ்ட் 29 நல்ல செய்தி வரும்” என கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 29 ஆன இன்று விஷால்-சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்த விழா நடைபெறவுள்ளதாக செய்திகள் தெரிவித்தன. அதன் படி இன்று சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள விஷாலின் இல்லத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டனர்.
கியூட் புகைப்படங்கள்
இந்த நிலையில் இரு வீட்டாரும் கலந்துகொண்டு வாழ்த்திய விஷால்-சாய் தன்ஷிகா ஜோடியின் நிச்சயதார்த்த விழாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இருவரும் கியூட்டாக காட்சி தரும் புகைப்படங்கள் காண்போரை அசர வைத்துள்ளது அப்புகைப்படங்கள் இதோ…



