ஃபைனல் ஷூட்டிங்கிற்காக லோகேஷனை மாத்திய எனிமி டீம்!

25 January 2021, 8:31 pm
Quick Share

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துபாயில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குநர் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா, கே ஆர் விஜயா, ரவிகாந்த் ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் சக்ரா. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. மற்ற படங்களைப் போன்று இந்தப் படத்தையும் ஓடிடி தளங்களில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

ஆனால், மாஸ்டர் படம் கொடுத்த தைரியத்தின் பலனாக சக்ரா படத்தை வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் என்பதால், இந்தப் படத்தை 12 ஆம் தேதி வெளியிடுகின்றனர்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 மற்றும் எனிமி ஆகிய படங்களில் விஷால் நடித்து வருகிறார். இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் எனிமி. இந்தப் படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்து வருகிறார்.

அண்மையில் இருவருக்கும் இடையில் நடந்த ஆக்‌ஷன் காட்சியின் போது ஆர்யாவுக்கு அடிபட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. விளையாட்டு கதையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் ஆரம்பத்தில் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். அதன் பிறகு ஒருவருக்கொருவர் எதிரிகளாகின்றனர். இந்த நிலையில், இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், மலேசியாவில் கொரோனா லாக்டவுன் காரணமாக அங்கு படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு படக்குழுவினர் துபாய் செல்ல இருக்கின்றனர். அங்கு ஆர்யா மற்றும் விஷால் ஆகியோருக்கிடையிலான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

0

0