அடேங்கப்பா…. போதுமா? ரஜினி கூட நடிச்சதும் சம்பளத்தை தாறுமாறா உயர்த்திய விஷ்ணு விஷால்!

Author: Rajesh
14 February 2024, 12:25 pm

திறமையை மட்டும் மட்டும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் சிறந்த நடிகராக நல்ல இடத்தை பிடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடிக் குழு படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து குள்ளநரி கூட்டம், ஜீவா, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், எஃப்.ஐ.ஆர், கட்டா குஸ்தி போன்றே பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

vishnu-vishal-updatenews360

தமிழை தவிர்த்து மலையாள சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோவாகவும் இருந்து வருகிறார். இவர் ரஜினி நடராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து ஒரு மகன் பெற்று பின்னர் விவாகரத்து செய்துவிட்டார். மனைவியை பிரிந்ததற்கு பல்வேறு காரணங்களை அடுக்கடுக்காக கூறி கழவிட்டதை தாஸா பண்ணினார்.

பின்னர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து இரண்டாம் திருமணம் செய்தார். இதெற்கெல்லாம் காரணம் இருவருக்கும் திருமணத்திற்கு முன்னர் இருந்த நெருக்கமான உறவு தான் என கிசுகிசுக்கப்பட்டது. அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து விஷ்ணு விஷால் தனது நடிப்பில் கவனம் செலுத்தி தற்போது ரஜினியுடன் லால் சலாம் படத்தில் அழுத்தமான ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ரஜினியுடன் லால் சலாம் படத்தில் நடித்தவுடன் கிடைத்த பிரபலத்தை வைத்து தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார் விஷ்ணு விஷால். ஆம், லால் சலாம் படத்திற்கு ரூ. 4 கோடி சம்பளமாக பெற்ற அவர் தற்போது தனது சம்பளத்தை ரூ. 8 கோடியாக உயர்த்திவிட்டாராம். இதை கேட்டதும் கோலிவுட்டே பேரதிர்ச்சியை அதிர்ந்துபோய்விட்டது. ரஜினி உடன் நடித்ததும் பெரிய ஆள் ஆகிடுறாங்களேப்பா என கூறி வருகிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!