நடிகையின் புடவை அவிழ்த்து முகம் சுளிக்க வைத்த ஹீரோ – எல்லைமீறி போகும் Promotions!

Author: Shree
17 August 2023, 3:34 pm

வர வர சினிமா எதை நோக்கி செல்கிறது என்றே தெரியவில்லை. டெக்னாலெஜி வளர்ந்த வேகத்தில் படத்தின் காட்சிகளும் , பாடல்களும் வரம்பிற்கு மீறி எடுக்கிறார்கள். பணத்திற்காக எப்படிவேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற வரையறையில் சினிமா விழுந்து நாசமாகி வருகிறது.

குறிப்பாக புது படங்களின் ப்ரோமோஷனை ஹாலிவுட் ரேஞ்சுக்கு செய்யவேண்டும் என நினைந்து பொதுமேடையில் ஆடல், பாடல், கேலி, கிண்டல், ஒருவரை ஒருவர் விமர்சிப்பது என இருந்து வருகிறது. தற்போது அதையெல்லாம் மீறி ஒரு படி மேலே சென்றுவிட்டார்கள்.

புது படத்தின் ப்ரமோஷனுக்காக சம்மந்தப்பட்ட ஹீரோ ஹீரோயின் படத்தில் நடிப்பதை விட மோசமாக மேடையில் எல்லைமீறி ரொமான்ஸ் செய்து எல்லோரையும் முகம் சுளிக்க வைக்கிறார்கள். அண்மையில் கூட நடிகை சமந்தா விஜய் தேவர்கொண்டாவுடன் படு நெருக்கமாக நடனமாடி முகம் சுளிக்க வைத்தார்.

அதையடுத்து தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு ப்ரோமோஷன் செய்த படத்தின் ஹீரோ ஹீரோயின் இருவரும் எல்லைமீறி நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி முகம் சுளிக்க வைத்துள்ளது. அதில் ஹீரோ விசாகன் ஹீரோயின் நேகா ஷெட்டியின் புடவையை அவிழ்த்து படு கேவலமாக நடனமாடியிருப்பது இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ:

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?