16 வயசுலயே எல்லாத்தையும் அனுபவிச்சுட்டேன்: பிரபல நடிகையின் பரபரப்பு !

Author: Poorni
4 October 2020, 4:45 pm
Quick Share

விசித்ரா பழைய மாதிரி மீண்டும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க அவருக்கு ஆர்வம் இல்லையாம். தன்னுடைய உடல்வாகுக்கு ஏற்ற மாதிரி, போலீஸ் அல்லது தொழிலதிபர் போன்ற வேடங்களில் நடிக்க அவர் ஆர்வமாக இருக்கிறாராம்.

1990- களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை விசித்ரா. திருமணத்துக்குப் பிறகு வியாபாரத்தில் பிஸி ஆனதால் நடிப்புக்கு முழுக்கு போட்ட விசித்ராவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் l.

தமிழில் கவர்ச்சியில் மட்டுமின்றி குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கியவர் நடிகை விசித்ரா. தேவர்மகன், ரசிகன், முத்து, வீரா என இவர் நடித்த வெற்றிப்படங்கள் அதிகம். 17 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் பட வாய்ப்புகளைத் தேடும் பணியை அவர் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் ஒரு பிரத்யேக யூடியூப் பேட்டியில், தான் 16 வயதில் சினிமாவுக்கு அறிமுகமானதாகவும் தனது ஆரம்ப கட்ட சினிமா பயணம் மிகவும் கஷ்டமாக இருந்ததாகவும் 16 வயதில் பார்க்க வேண்டிய அனைத்து கஷ்டங்களையும் தான் அனுபவித்ததாகவும் கூறியுள்ளார்.

Views: - 74

0

0