சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

Author: Prasad
2 July 2025, 6:48 pm

மோகான்லாலின் வாரிசுகள்?

மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில் இருந்தே மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு பிரணவ் நடித்த “ஹிரிதயம்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் “Dies Irae” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மோகன்லாலின் மகளான விஸ்மயாவும் தற்போது கதாநாயகியாக ஒரு திரைப்படத்தில் அறிமுகமாகவுள்ளார்.

துடக்கம்…

vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie

அதாவது ஜூட் ஆந்தனி ஜோசஃப் என்ற மலையாள இயக்குனர் இயக்கவுள்ள “துடக்கம்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் விஸ்மயா மோகன்லால். விஸ்மயா ஒரு எழுத்தாளரும் கூட. இவர் Grains of Stardust என்ற இரு நாவலை எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார். மோகன்லால் ரசிகர்கள் பலரும் இவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Leave a Reply