18 வயதில் இளம் மொட்டாக பத்திரிகை அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள தொகுப்பாளினி அர்ச்சனா !

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2021, 10:45 am
Archana - Updatenews
Quick Share

தமிழ் திரையுலகில் நடிகை, Vj, போல் பல முகங்களை கொண்டவர்தான் அர்ச்சனா. இவர் முதன் முதலில் சன் டிவியில் ‘காமெடி டைம்’ தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்கையை ஆரம்பித்தார்.

Comedy நடிகர் சிட்டிபாபுவுடன் அவர்களும் இணைந்து பணியை தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக நடிகை ஸ்வர்ணமால்யா விட்டுப்போன இளமை புதுமை என்னும் நிகழ்ச்சி, செலிபிரிட்டி கிச்சன் போன்ற நிகழ்ச்சிகளிலும் இவர் Vj- வாக பணிபுரிந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வினித் முத்துகிருஷ்ணன் என்னும் Navy Officer-ஐ திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகும் இவர் Tv- யில் பணியாற்றுவதை விடவில்லை.

மேலும் இவர், சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்து கொண்டு தான் வருகிறார். சமீபத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு பெயரை டேமேஜ் செய்து கொண்டார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் 18 வயதில் இருக்கும் போது ஒரு பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு “முதன் முறையாக பத்திரிக்கை அட்டை படத்தில் இடம்பெற்ற நான், இந்த பயணத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” என்று கூறியுள்ளார்.

Views: - 247

74

38