‘சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பெஞ்ச் மார்க்’.. என் வாழ்வை மாற்றியவர் : ரஜினி படங்களின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு VJ அர்ச்சனா பதில்..!

Author: Vignesh
10 December 2022, 11:35 am

அர்ச்சனா விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் சின்னத்திரையில் பிரபலமான விஜேவாக திகழ்பவர். இவர் ‘டாக்டர்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். அர்ச்சனா டிவி, யூடிப் சேனல் என்று கலக்கி வரும் தற்போது ஆர்ஜேவாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

அர்ச்சனா ரேடியோ மிர்ச்சியில் ரசிகர்களை கவரும் தனது கலகலப்பான பேச்சில் பிசியாக இருந்த சமயம் தமிழுக்காக பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

VJ Archana-updatenews360

அதில் தனது ஆர்ஜே கனவு குறித்து பேசிய அவர் ரேடியோ மிர்ச்சியில் பணியாற்ற வேண்டும் என்பது தனது கனவு என்று தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் பிரபலமான ‘அச்சும்மா’ என்ற பெயராலே தற்போது ரேடியோ மிர்ச்சியிலும் அழைக்கப்படுவதால் ரசிகர்களுடன் ஒரு கனெக்ட் இருப்பதாக தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பேசும் போது மேடம் நீங்களா? என்று ஆச்சரியத்துடன் பேசுவதை பற்றியும் கூறியுள்ளார்.

VJ Archana-updatenews360

நிறைய ரசிகர்கள் தன்னுடன் பேசும் போது டாபிக் மொத்தத்தையும் கேட்டுவிட்டு உங்க குரலை கேட்கத்தான் கால் பண்ணேன் என சொல்லி போனை வைத்துவிடுவதாகவும் அர்ச்சனா தெரிவித்துள்ளார். மேலும் விஜே, யூடிப் சேனல், தற்போது ஆர்ஜே என கலக்கி வரும் அர்ச்சனாவிற்கு நேரமெல்லாம் எப்படி பத்துக்கிறது என கேட்கப்பட்ட போது, எல்லாரையும் போல எட்டு மணிநேரம் நல்லாவே தூங்குறேன்.

VJ Archana-updatenews360

மத்தபடி மீதி பதினாறு மணிநேரத்துல தான் இந்த வேலையெல்லாம். இன்னும் சொல்லப்போன வேற வேலை இருந்தாலும் சொல்லுங்க. நெறைய டைம் எனக்கு மிச்சம் இருக்கும் என்றும் சொல்லி அர்ச்சனா அசத்தியுள்ளார். மேலும் ரஜினியின் தீவிர ரசிகையான அர்ச்சனா, ‘பாபா’ ரீ ரிலீஸ் குறித்து பேசும் போது, சூப்பர் ஸ்டாரை வேறு ஒரு பரிணாமத்தில் காட்டிய படம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு பிறகு தான் ஆன்மீகத்தில் தனது அதிக ஈடுபாடு ஏற்பட்டதாகவும் அர்ச்சனா கூறியுள்ளார்.

Rajini - updatenews350.jpg 2

அத்துடன் உருவமில்லாத கடவுள் நம்மை சூழ்ந்து இருப்பதையும் உணர வைத்தது பாபா படம் என்றும் கண்டிப்பாக படத்தை திரையரங்கில் பார்ப்பேன் என்றும் கூறியுள்ளார். ரஜினி படங்களின் நெகட்டிவ் விமர்சனம் குறித்து பேசிய அர்ச்சனா, சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பெஞ்ச் மார்க். எந்த ஹீரோவை கேட்டாலும் சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்கணும் தான் சொல்லுவாங்க. அப்படி ஒரு இடத்தை கிரியேட் பண்ணி இருக்கார் என தெரிவித்துள்ளார்.

jailer - updatenews360

நெல்சனோட ‘ஜெயிலர்’ படத்தை பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது மகள் சாரா தற்போது பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருப்பதாகவும், தான் டவுன் ஆகும் போதெல்லாம் அவர்தான் தனக்கு சப்போர்ட்டாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் தற்போது ஆர்ஜே அவதாரம் எடுத்துள்ள விஜே அர்ச்சனா.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!