6 வருஷத்துக்கு பின் விஜய் டிவிக்கு வந்த VJ பாவனா…. இதுவும் நிரந்தரமல்ல!

Author: Rajesh
4 December 2023, 4:48 pm

பிரபல தொகுப்பாளினியான விஜே பாவனா விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர், வீடியோ ஜாக்கி, பின்னணி பாடகர் மற்றும் நடனக் கலைஞர் என பல திறமைகளை கொண்டு சிறந்து விளங்கி வருகிறார்.

ஒரு நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தது விஜே பாவனா தான். ஆனால், சில வருடங்களாகவே அவர் விஜய் தொலைக்காட்சியில் தலைகாட்டாமல் போயிவிட்டார். இதனிடையே கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பின்னர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியில் ஒளிபரப்பாளராக பணிபுரிகிறார் மற்றும் சேனலுக்காக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இதனிடையே ஏன் விஜய் தொலைக்காட்சியில் பணி செய்யவில்லை என பேட்டி கேட்டதற்கு, எல்லாம் நன்றாக தான் சென்றுக்கொண்டிருந்தது. திடீரென பிரியங்கா என ஒருத்தர் வந்தார். அவரால் என் கெரியரே காலி ஆகிடுச்சு என மறைமுகமாக கூறினார்.

விஜய் டிவியின் ஸ்டைலே இப்போ வேற…. அவர்கள் இப்போது நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு செல்வதே நோக்கமாக வைத்துள்ளார்கள். அதற்கு பிரியங்கா ஆப்டாக இருந்ததால் அவரையே எல்லா நிகழ்ச்சிகளிலும் போட்டு என்னை போன்ற ஆட்களை வெளியேற்றிவிட்டர்கள். என்னுடைய ஸ்டைலுக்கு அது சரியாக வராது. இதனால் நான் மீண்டும் விஜய் டிவிக்கு வர வாய்ப்பு இல்லை என்று ஏற்கனவே கூறியிருந்த பாவனா…

தற்போது மீண்டும் விஜய் டிவிக்கு வந்துள்ளார். ஆம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், கடிகாரத்தை 6 வருடங்கள் ரீவைண்ட் செய்து, இந்த வார இறுதியில் விஜய் டிவியில் மாலை 6:30 மணி முதல் சூப்பர் சிங்கரை பாருங்கள்! இறுதிப் போட்டிக்கு முன் 3 எபிசோட்களை கெஸ்ட் ஹோஸ்ட் செய்ய செட்டுக்குத் திரும்பிச் சென்றது மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இந்த மேடையில் என்னை மீண்டும் பார்க்க விரும்புபவர்களிடமிருந்து கேட்க காத்திருக்கிறேன். ஆனால், இது நிரந்தரமில்லை. தற்காலிகமானது மட்டுமே. ஸ்டார் ஸ்போர்ட் டிவியில் தொடங்கி உள்ள கபடி தான் என்னுடைய முக்கியமான வேலை என பதிவு செய்துள்ளார். இதையடுத்து விஜே பாவனாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறியுள்ளனர்.
.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!