நடந்து முடிந்த VJ சித்துவின் நிச்சயதார்த்தம் ! மாப்பிள்ளை இவர்தானாம் !

26 August 2020, 11:47 am
VJ Chita 1 -Updatenews360
Quick Share

மக்கள் தொலைகாட்சியில் VJ-வாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்து.

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய On Screen Love, Chemistry எல்லாம் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். சித்ரா-குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று வருகிறார்கள்.

ஆனால் தற்போதைய செய்தி என்ன என்றால், நடிகை சித்ராவுக்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் ஜிபிஎன் பேலஸில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளதாம். இவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் அவருடைய பெயர் ஹேமந்த் ரவி. இவருடைய ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது சித்ராவின் புகைப்படம் அளவுக்கு வைரலாகி வருகிறது.

Views: - 48

0

0