சாப்பாட்டுக்கு கூட வழியில்லை.. பணக்கஷ்டத்தால் மேடையில் கண்ணீர் விட்டு கதறிய விஜய் டிவி பிரபலம்..!

Author: Vignesh
28 March 2024, 11:35 am

பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜொலிக்க ஆரம்பித்தார். ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, உசைன் என்பவரை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சொந்தமாக யூடியூப் சேனல் துவங்கி நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

vj manimegalai

இந்நிலையில், உசைனை திருமணம் செய்து கொண்ட அந்த சமயத்தில், அவர்கள் மதத்தை வைத்து சமூக வலைதளங்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. தற்போது, பல வருடங்கள் கழித்து தான் அவரது அம்மா மணிமேகலை உடன் பேச தொடங்கி உள்ளாராம். மணிமேகலை தான் காதல் திருமணம் செய்த புதிதில் பட்ட கஷ்டம் பற்றி தற்போது பேசியுள்ளார்.

vj manimegalai

நான் அம்மா வீட்டில் இருக்கும் போது ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன். என் காருக்கு கூட வீட்டில் தான் பெட்ரோல் போடுவார்கள். ஆனால், காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. பணம் மொத்தமும் அம்மா வீட்டில் லாக் ஆகிவிட்டது. அந்த மாதம் வேலைக்கு சென்றால்தான் சம்பளம் என்ற நிலையில் இருந்தோம்.

vj manimegalai
vj manimegalai

சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருந்திருக்கிறோம். குரூப் டான்ஸரான உசேனுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரும் எனக்கு குறைந்த சம்பளம் தான் முதல் மாதமே மோதிரத்தை அடகு வைத்தோம். அதை மீட்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் முதல் முறையாக ஈவென்ட்டிற்கு சென்றேன். அதுதான் என்னுடைய முதல் ஈவென்ட் அதன் பிறகு ஆசைப்பட்டதை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். விரைவில், ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை என மணிமேகலை கண்ணீருடன் பேசி உள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!