பாடகியாக அவதாரம் எடுத்த விஜய் டிவி VJ பிரியங்கா : வைரலாகும் RAP பாடல்..!

Author: Vignesh
30 November 2022, 8:30 pm
vj priyanka - updatenews360
Quick Share

VJ பிரியங்காவின் 1 மினிட் பாடல் வீடியோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. இவர் தொகுப்பாளர் மாகாபா ஓடு இணைந்து நடத்தி வரும் பிரபலமான ஷோ தான் ‘சூப்பர் சிங்கர்’. இந்த ஷோவின் மூலம் பல மக்கள் மனதில் இடம் பிடித்தார் ப்ரியங்கா.

priyanka deshpande - updatenews360

அதன்பின் பலவித ஷோக்களையும் அவர் நடத்தியுள்ளார். ஆனாலும் தற்போதுவரை நீங்காமல் நடத்திக்கொண்டிருக்கும் ஷோ சூப்பர் சிங்கர் தான். இதனைத் தொடர்ந்து அவர் ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இரண்டாவதாக வெற்றி பெற்றார். அதையடுத்து மீண்டும் பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

priyanka deshpande - updatenews360

இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவா இருக்கும் பிரியங்கா அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களின் இடையே ட்ரெண்டிங் ஆகி வருவார். அந்த வகையில் அவர் தற்போது 1 மினிட் மியூசிக் என்ற தலைப்புடன் அவர் சொந்த குரலில் பாடி அசத்தியிருக்கும் புது பாடலின் சூப்பரான வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Views: - 331

4

1