“34 வயசுல கூட அமுல் பேபி மாதிரி கொழு கொழுன்னு இருக்கீங்க” – Vj ரம்யாவின் செம்ம Cute புகைப்படம் !

19 April 2021, 2:45 pm
Quick Share

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹிட் புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது படுக்கையில் இவர் படுத்துக்கொண்டு உடம்பு முழுவதும் போர்வையால் சுற்றி வெறும் கண்கள் மட்டும் தெரியும்படி புகைப்படம் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார். கிட்டத்தட்ட அன்பே சிவம் படத்தில் பஸ்ஸிலிருந்து அடிபட்ட பின் கமலை மருத்துவமனையில் உடம்பு முழுவதும் சுற்றி கண்கள் மட்டும் தெரியும்படி இருப்பாரே அதே போல் இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு Caption ஆக “தூங்கு மூஞ்சி அவார்ட் கொடுத்தாலும் நான் வேறு ஒருவரை அனுப்பி அந்த விருதை வாங்கி வர சொல்லுவேன்” என்று அப்லோட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “34 வயசுல கூட அமுல் பேபி மாதிரி கொழு கொழுன்னு இருக்கீங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 111

1

0