வாடி வாடி நாட்டுக்கட்ட… 2024 புத்தாண்டை வித்தியாசமாய் வரவேற்ற விஜே ரம்யா (வீடியோ)

Author: Rajesh
31 December 2023, 10:51 am

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

vj ramya - updatenews360

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி, பிரியங்கா என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல் மொழி, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களை விஜே ரம்யா நடித்து இருக்கிறார்.

ஏற்கனவே, சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார். இவர் அப்ரஜித் ஜெயராமன் என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு பின்னர் ஓராண்டில் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

vj ramya - updatenews360

அதையடுத்து தொடர்ந்து நடிப்பு, தொகுப்பாளர் பணிகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் அவர் தற்போது ஜிம்மில் தனது தோழிகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ” வாடி வாடி 2024″என புத்தாண்டை வரவேற்றுள்ளார். இந்த குத்து டான்ஸ் இணையவாசிகள் கவனத்தை ஈர்க்க அந்த ரெண்டு பேபி நம்பர் கிடைக்குமா? என கேட்டு நச்சரித்துள்ளனர். இதோ அந்த வீடியோ:

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!