சன் டிவியில் Daily ஜோதிடபலன் சொன்ன VJ விஷால், இப்போ என்ன பன்றாங்க தெரியுமா ?

18 August 2020, 2:15 pm
Quick Share

ஒரு காலத்தில், மக்கள் தினமும் காலையில் சன் டிவியை பார்ப்பது இவரின் குரலை கேட்க்கதான். அதை கேட்காதவர்களே யாரும் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. உங்களது ராசிபலனனில் நேரம், காலம், ராசியானநிறம், அனுகூலமான திசை என மக்களுக்கு அன்றைய தேவையான அனைத்தையும் பிரிச்சு பிரிச்சு சொல்லுவார் வைப்பார் விஜே விஷால். சினிமா பாடகி போல இனிமையான குரலில் ஜோதிடபலனை வாசித்து வந்தவர் தான் Vj விஷால்.

சன் டிவியில் ‘ஜோதிடபலன்’ நிகழ்ச்சியைப் பல வருஷங்களாகத் தொகுத்து வழங்கி வந்த வீஜே விஷால். ஐ.டி வேலை பார்த்துக்கொண்டு, Part time ஆக மீடியாவில் வலம் வந்தவர். அவருடைய வேலை காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜோதிடபலன்’ நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பிரபல நாளிதழில் பேட்டியளித்திருந்த இவர், “வேலையின் காரணமாக லண்டனில் மூன்று வருஷம் இருக்க வேண்டியதாக இருந்துச்சு. லண்டனில் இருந்து வந்ததுக்கு அப்புறம் பார்ட் டைமாக ஆங்கரிங் பண்ணலாம்னு டெஸ்ட் ஷூட் போயிருந்தேன். இப்போ வரை எந்த பதிலும் வரலை. மீடியா எனக்கு அதிகமாக Name கொடுத்துச்சு. ஐ.டி கம்பெனி எனக்கான பண வளர்ச்சியைக் கொடுத்துச்சு. பல விஷயங்கள் இங்க கத்துக்கிட்டேன். சரியானமா காரணமில்லாமல்
எந்த ஒரு விஷயத்துக்காகவும், யாருக்காகவும் என் ஐ.டி வேலையை விடக்கூடாது, விட மாட்டேன் என்பது என்னுடைய தெளிவான எண்ணம். இப்பவும் பல இடங்களில் என்னைப் பார்க்கிற என் ரசிகர்களுக்கு ரொம்ப நல்லா பண்றீங்க என புகழ்கின்றனர்.
அதை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

பல நாளிதழ்களில் லைஃப் ஸ்டைல் பற்றி ஆர்ட்டிகிள் எழுதியிருக்கேன். இனிமேல், எழுத்தில் கவனம் செலுத்தலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்.. மறுபடியும் வேலை காரணமா லண்டன் போறேன்”என்று பேசியுள்ளார்.