தமிழ் சினிமாவுக்கு சர்வேதச தரத்தில் இயக்குனர் – புகழ்ந்துதள்ளிய லாரன்ஸ்!

Author:
30 July 2024, 5:11 pm

தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள “ராயன்’ படத்தை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நேற்று ‘ராயன்’ திரைப்படத்தை பார்த்தேன். தனுஷ் மிகச்சிறப்பாக படத்தை இயக்கி நடித்தும் உள்ளார்.

மேலும் , எஸ்.ஜே.சூர்யா வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் துஷாரா விஜயன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் சார் சிறப்பான இசை கொடுத்துள்ளார். நமக்கு தற்போது ஒரு சர்வதேச தரத்திலான இயக்குனர் கிடைத்து இருக்கிறார். தனுஷின் 50வது படத்திற்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டின் முன்னணி நடிகர் தனுஷின் நடிப்பிலும் இயக்கத்திலும் வெளிவந்து சக்கை போடு போட்டு வரும் “ராயன்” திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க இவர்களுடன் செல்வராகவன், துஷாரா விஜயன், பிரகாஷ்ராஜ் , அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ,சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் வெளியான நாட்களில் இருந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வசூலில் பட்டய கிளப்பி வருகிறது. தற்போது வரை இப்படம் மொத்த வசூல் ரூ.87 கோடி ஈட்டி உள்ளது. மேலும் ‘ராயன்’ விரைவில் ரூ. 100 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!