“அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்” – சபதம் எடுத்த கமல் ஹாசன் !

9 November 2020, 2:42 pm
Quick Share

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு அத்தாட்சியாக இருந்த சிவாஜி கணேசனுக்கு பிறகு இருக்கும் ஒரு நடிகர் என்றால் அது நம்ம உலகநாயகன் கமலஹாசன் தான். எந்த கதாபாத்திரங்களில் நடித்தாலும் அந்த கதாபாத்திரத்தை தன் கண் முன்னே நிறுத்துவார்.

இவரை பார்த்து பல பேர் இந்த தமிழ் சினிமாவில் நிறைய கலைஞர்கள் நுழைந்துள்ளார்கள். உதாரணம் விக்ரம், சூர்யா, லோகேஷ் கனகராஜ் என பல கலைஞர்கள் இவரின் திறமையை பார்த்து, Inspire ஆகி இந்த துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள், அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.

நடிப்பு என்றால் என்ன என்பதை இவரை பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் என Upcomming Actors கூறி வருவது நாம் பார்த்திருப்போம். அந்த அளவிற்கு அசைக்க முடியாத ஜாம்பவனாக இருக்கிறார் கமல்.

பொதுவாக ஒரு கட்சியின் தலைவர் என்றால் இன்னொரு கட்சியை நாம் சாடி பேசவேண்டும், கமல்ஹாசனும் இதற்கு ஒன்றும் விதிவிலக்கல்ல நேரம் கிடைக்கும் போது எல்லாம் பாஜக அரசை கிண்டலடித்து நக்கலடித்து பேசுவார். இந்தநிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய, கமல் அவர்களுக்கு பல இடங்களில் இருந்து ஏகப்பட்ட வாழ்த்துக்கள். அதற்கு நன்றி சொல்லி வகையில்,

“என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்திய ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பிற துறை ஆளுமைகள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் பிறந்த நாளை ‘நற்பணி’ தினமாகக் கொண்டாடிய எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் சகோதரர்களை மனதாரத் தழுவிக்கொள்கிறேன்.

உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள ‘உள்ளும் புறமும்’ சீரமைப்பேன். அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்” என்று Twitter வலைதளத்தில் Confident-ஆக சொல்கிறார்.

Views: - 29

0

0