தனுஷ்க்கு என்னாச்சு? உடல் மெலிந்து அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே? நெப்போலியன் உருக்கமான பதிவு!
Author: Udayachandran RadhaKrishnan15 July 2025, 12:15 pm
90களில் சினிமாவில் முக்கிய வில்லனாக வலம் வந்தவர் நடிகர் நெப்போலிய்ன். தற்போது இன்ஸ்டாகிராம் போற் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார் நெப்போலியன்.
தனது மனைவி, மகன்களுடன் அமெரிக்காவில் செட்டில் ஆன நெப்போலியன், பட வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவுக்கு வந்து நடித்து கொடுத்துவிட்டு செல்வார். பிரபல ஐடி கம்பெனி நடத்தி அமெரிக்காவில் கொடி கட்டி பறந்து வருகிறார் நெப்போலியன்.
தன்னுடைய மூத்த மகன் தனுஷ்க்கு ஏற்பட்ட அரிய தசை சதைவு நோய்க்காக அமெரிக்காவில் செட்டில் ஆன நெப்போலியன், சமீபத்தில் ஊரே மெச்சும் அளவுக்கு ஜப்பானில் மகனுக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்தார்.

இந்த நிலையில், பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது நெப்போலியன் மகனை சந்தித்துள்ளார். இது தொடர்பான வீடியோக்களை நெப்போலியன் தனது இஸ்டாக பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஷாக் ஆகிவிட்டனர். உடல் மெலிந்த நிலையில், ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன தனுஷ்க்கு என்னாச்சு. பெட் ரெஸ்டில் அவர் உள்ளதால் பல கேள்விகளை எழுப்பிய நெட்டிசன்கள், அருகே மனைவி இல்லாதது குறித்தும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
