சிரஞ்சீவியை விட விஜயகாந்த் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டார்? கொந்தளிக்கும் கேப்டன் நண்பர்!
Author: Udayachandran RadhaKrishnan28 May 2025, 2:31 pm
கேப்டன் விஜயகாந்த் குறித்து அவரது நண்பர் பகிர்ந்த விஷயம் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விஜயகாந்த்தை வைத்து படம் இயக்கிய அவரது நண்பரும், வசனகர்த்தாவுமான லியாகத் அலிகான் சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது கொடுத்துள்ளது தப்பான விஷயம்.
இதையும் படியுங்க: எஸ்.ஜே.சூர்யா சொன்னது எல்லாம் பொய்?- கொந்தளித்த தயாரிப்பாளர்! ஜின் பட விவகாரத்தில் திடீர் திருப்பம்!
சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் கொடுத்துவிட்டு கேப்டனுக்கு மட்டும் பத்மபூஷன். பத்ம விபூஷன் விருது பெரிய விருது. எந்த விதத்தில் கேப்டன் குறைந்து போய்விட்டார்.

நான் சிரஞ்சீவியை தப்பு சொல்லவில்லை, அவர் அரசியலுக்க வந்து தோற்று போனவர். ஆனால் கேப்டன், அரசியலுக்க வந்து வென்றவர், அவர் திரையுலகில் ஆற்றிய பணி வேறு யாரும் செய்ய முடியாதது,
படப்பிடிப்பில் சாப்பாட்டு விஷயத்தை மாற்றியவர். அனைவருக்கும் ஒரே சாப்பாடு என கொண்டு வந்தவர், எவ்வளவு பேரை இலவசமாக படிக்க வைத்துள்ளார். அவரால் பல பொறியாளர்கள், மருத்துவர்கள் உருவாகியுள்ளனர்.

பலருக்கும் சாப்பாடு போட்டு பசியை ஆற்றியவர், பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை உருவாக்கியவர். அவருக்கு பத்மவிபூஷன் விருதை கொடுத்திருக்க வேண்டும் என லியாகத் அலிகான் பொங்கியுள்ளார்.