“தாலி எங்கே?” என கேள்வி கேட்ட ரசிகர்… “தாலியை கழட்டினா என்ன தப்புன்னு..” சொன்ன அனிதா சம்பத்..!

23 June 2021, 8:59 pm
Quick Share

முன்பெல்லாம் சினிமாவில் நடிப்பவர்கள் கூட சிலரை தாண்டி அதிகம் யாரும் பிரபலமாவது இல்லை. ஆனால் இப்போது செய்தி வாசிப்பாளர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கிவிட்டனர். அதில் கவனிக்கத்தக்கவர் அனிதா சம்பத். Sun தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள்.

இவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான மரியாதை, இந்த மரியாதை எல்லாம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நன்றாக இருந்தது. இவர் விளையாடிய விளையாட்டை பார்த்த ரசிகர்களுக்கு இவரை கொஞ்சம் பிடிக்காமல் போனது. தற்போது மீண்டும் செய்தி வாசிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சிறிது நாட்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் அனிதா சம்பத் கமெண்ட் வழியாக தற்போது மீண்டும் செய்தியாகி உள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர், அதிர்ச்சியாகி தாலி எங்கே என கேள்வி கேட்க, அதற்கு அனிதா பதிலளித்துள்ளார். அதுகுறித்து கூறிய அவர், “என் செய்தியை அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் பார்ப்பார்கள். அதனால் நான் மதத்தை அடையாளப்படுத்தவில்லை. தாலியை மறைத்து தான் வைத்திருக்கிறேன். கழட்ட வில்லை, அப்படியே கழட்டுனா எந்த தவறும் இல்லை” என்று கூறியுள்ளார்.

Views: - 767

71

85