பைக்கில் இருந்து தவறி விழுந்த தல அஜித் பட நடிகை ! வைரலாகும் வீடியோ !

24 June 2020, 10:16 pm
Quick Share

தல அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, மாதவனோடு விக்ரம்வேதா போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இந்தப் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். குறிப்பாக இவர் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மேலும் சில விருதுகளையும் பெற்றார்.

தற்போது இவர்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக புல்லட் பைக் ஓட்டிய அவர் கீழே தவறி விழுந்துள்ளார். இதனை இந்த வீடியோவை பகிர்ந்து அவர் “இந்திய சினிமாக்களில் தைரியமான ஹீரோயின் என்றால் பைக் ஓட்டும் சீன் இல்லாமல் இருந்தால் எப்படி? என்னிடம் ஷுட்டிங்கிற்காக பைக் ஓட்ட தெரியுமா என்று கேட்டதற்கு உடனே முடியாது என்று சொல்லிவிட்டேன்.

ஆனாலும் ஒரு முறை முயற்சி செய்தேன். ஆனால் அந்த சாலை மிகவும் ஈரமாக இருந்ததால் அதில் எனக்கு சிறு விபத்து நேர்ந்தது. நான் விழுந்தவுடன் எல்லோரும் என்னிடத்தில் ஓடி வந்தார்கள். ஆனால் பலருக்கும் பைக்கிற்கு என்ன ஆச்சு என்றுதான் கவலையாக இருந்திருக்கும்” என்று காமெடியாக கூறியுள்ளார்.