தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் திரைப்படம் வெளியாவது எப்போது?

2 November 2020, 4:27 pm
Quick Share

கொரோனா பரவலினால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு 7 மாதங்கள் கடந்து நீடித்து வருகிறது. ஊரங்கினால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் ஒரு மிகப்பெரிய நீண்ட இடைவேளைக்குப் பிறகு நவம்பர் 10ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவிருக்கின்ற ன.

இருப்பினும் திரையரங்க உரிமையாளர்கள் VPFவிற்கு விதிக்கப்படும் கட்டணங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர். அக்கட்டணத்தை குறைக்காத பட்சத்தில் திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிடப் போவதில்லை என்று கூறிவருகின்றனர்.

இந்நிலையில் பல வெளிநாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை ஆரம்பித்து இருப்பதால் அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களான தளபதி விஜய்யின் மாஸ்டர்,

சீயான் விக்ரமின் கோப்ரா மற்றும் சிவகார்த்திகேயனின் டாக்டர் ஆகிய திரைப்படங்களை 2021 ஆம் ஆண்டு கோடை கால விடுமுறைகளை கருத்தில் கொண்டு வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Views: - 16

1

1