இதையுமா எடுப்பிங்க ?.. “சொந்தமா யோசிச்சு கொடுங்க”… பிரபல வாரிசு நடிகரை சீண்டிய பயில்வான் ரங்கநாதன்..!

Author: Vignesh
28 January 2023, 11:30 am

சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

தற்போது, வாரிசு படம் வெளியாகி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில், நடிகர் விஜய் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தக் கருத்து பூதாகரமான நிலையில், அரசியல் பிரபலங்கள் கூட இது பற்றி கருத்துக்களை சொல்ல ஆரம்பித்து விட்டனர். இருப்பினும், விஜய் தரப்பில் இருந்து எந்த கருத்தும் வெளியாகவில்லை.

Vijay - Updatenews360

இந்த நிலையில், இது தொடர்பாக பேசிய பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது:- எப்போதுமே நான்தான் அடுத்த மக்கள் திலகம், அடுத்த நடிகர் திலகம் அடுத்த உலக நாயகன் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். அப்படித்தான் சூப்பர் ஸ்டார் பட்டமும் அது ரஜினி ஒருவருக்கு தான் பொருந்தும். அந்த பட்டத்தையே இப்போது திருடுகிறார்கள். எத திருடனும்னு ஒரு விவஸ்தை இல்லையா..?

rajini - updatenews360

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அடுத்த எம்ஜிஆர், சிவாஜி, கமல் என்ற பேச்சுக்கு வந்ததே. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பட்டத்தின் மீது மட்டும் எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. பாபா பட தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் இனி நடிக்கப்போவதில்லை. கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று சினிமா வட்டாரங்களிலேயே வதந்தி எழுந்தது.

சூப்பர் ஸ்டார் சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் இந்த நேரத்தில் கூட, விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கின்றனர். என்னதான் விஜய்யின் படங்கள் ஹிட் கொடுத்தாலும், கோடிக்கணக்கில் வசூல் செய்தாலும், ரஜினிகாந்த் ஆக்டிவாக இருக்கும் காலகட்டத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் என்பதெல்லாம் தேவையில்லாத பேச்சு தான்.

vijay - updatenews360 k

ஆனால் இது போன்ற விஷயங்கள் விஜய்க்கு எதிரான சர்ச்சை கருத்துகளாக மாறுவதற்கு காரணம் இதுவரை விஜய், இந்தப் பிரச்சினையைப் பற்றி வாய் திறக்காமல் இருப்பதுதான். அவர் மட்டும் ஏதாவது ஒரு மேடையில் சென்னை சூப்பர் ஸ்டார் என்று கூற வேண்டாம், ரஜினி தான் என்றும் சூப்பர் ஸ்டார் என்று ஏதாவது ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்தால் எந்த சர்ச்சையும் அவருக்கு வராது, என தெரிவித்துள்ளார்.

மேலும் வழக்கமாக கதையை தான் திருடுவீங்க… இப்போ பட்டத்தை எல்லாம் திருட ஆரம்பித்து விட்டீர்களா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

vijay - updatenews360 3

இதுக்கு சிலர் ஆதரவு வேற கொடுக்கிறாங்க என்றும், சொந்தமா யோசிச்சு ஒரு பட்டத்தை கொடுங்க. சம்பந்தப்பட்ட இரண்டு நடிகர்களுமே மவுனமா இருக்காங்க என்றும், அவங்கக்கிட்டே பேசிட்டேன் எனவும், மவுனத்தை கலைங்க என்று சொல்லிவிட்டேன் என பயில்வான் ரங்கநாதன் விளாசியுள்ளார்.

மேலும் தான் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதில்லை என்றும், நான் யூட்யூப் சேனலும் நடத்தவில்லை. சில யூட்யூப் சேனல்கள் என்னை பேச சொல்கிறார்கள், கன்டென்ட் கொடுக்க சொல்கிறார்கள் எனவும், நான் பேசுகிறேன், அவ்வளவுதான் என்று தனது பேச்சுக்கும் பயில்வான் ரங்கநாதன் விளக்கம் தெரிவித்துள்ளார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!