அது மட்டும் நடந்தா நான் பிக்பாஸே பார்க்கமாட்டேன் – இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் இவர் தான்!

Author:
1 November 2024, 2:39 pm

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 9 போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் ரஞ்சித், ஜாக்லின், தீபக் , சுனிதா, அருண், சத்யா, பவித்ரா,ஜெஃப்ரி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

பெண்கள் அணிக்கு நாமினேசன் ப்ரீ பாஸ்ட் கிடைத்துள்ளது. இது அவர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஆபர் ஆக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது வாரம் இந்த வார நாமினேஷனில் ஃப்ரீ ஃபாஸ் டாஸ்க் வென்றிருக்கிறார்கள்.

தங்களது அணியில் இருந்து ஒருவரை யார் காப்பாற்ற போகிறார்கள் என்ற ஒரு கேள்விதான் எல்லோர் மத்திலும் எழுந்திருக்கிறது. இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

bigg boss

அதன்படி நாமினேட் ஆகியுள்ள 9 போட்டியாளர்களில் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று டேஞ்சர் ஜோனில் இருக்கும் போட்டியாளர்கள் சுனிதா , அன்ஷிகா மற்றும் பவிதா இந்த மூன்று பேரில் ஒருவர் நிச்சயம் இந்த வாரம் வெளியேறப் போகிறார்கள்.

இதில் ஒருவர் சேவ் செய்யப்படுகிறார். அதில் யார் வெளியேறப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. பெண்கள் அணிக்கு நாமினேஷன் பிரீ பாஸ் கிடைத்துள்ள நிலையில் இந்த மூவரில் யார் ஒருவரை காப்பாற்றப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் .

bigg boss

இப்படி விஷயம் இருக்கும் சமயத்தில் இந்த நபர் வெளியேறக்கூடாது என ஆடியன்ஸ் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களையும் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களின் பெயரையும் கமெண்ட்ஸ்களில் தெரிவித்து வருகிறார்கள் .

அந்த வகையில் சௌந்தர்யா இந்த வீட்டை விட்டு வெளியேறவே கூடாது என பலரும் கூறி வருகிறார்கள். மேலும் இந்த பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் ரஞ்சித் இந்த வீட்டை விட்டு வெளியேறினால் நான் பிக் பாஸ் பார்ப்பதையே நிறுத்தி விடுவேன் என அவரது தீவிர ரசிகர்கள் சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!