பிக்பாஸ் 7 வீட்டிற்குள் நுழைந்த போல்டான நடிகை… யார் இந்த மாயா S கிருஷ்ணன்?

Author: Shree
2 October 2023, 2:32 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மாயா S கிருஷ்ணன் என்ற போல்டான நடிகை போட்டியாளராக கலந்துக்கொண்டிருக்கிறார். அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள அவர் யார் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நிறைய குறும்படங்களில் தனது போல்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான “வானவில் வாழ்க்கை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ரஜினியின் 2.o திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ஒரு விலை மாதுவாக நடித்தார். அந்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தது.

தற்போது தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் இவர் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மேலும் விரைவில் வெளியாக உள்ள நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் பிக்பாஸில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தன் நடவடிக்கைகளின் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆவார் என எதிர்பார்க்கலாம்.

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் லிஸ்ட்:

ராட்சசன் பட நடிகை ரவீனா!
சத்யா சீரியல் நடிகர் விஷ்ணு!
இலக்கியவாதி பவா செல்லத்துரை!
விக்ரம் நடிகை மாயா S கிருஷ்ணன்!
பாடகர் யுகேந்திரன்!
அருவி பட பிரபலம் பிரதீப் அந்தோனி!
வனிதா மகள் ஜோவிகா!
டான்சர் மணிசந்திரா!
ஐஷு டான்சர்!
கூல் சுரேஷ்
பூர்ணிமா ரவி
ரவினா தாஹா!
ப்ரதீப் ஆண்டனி
நிக்ஸன்!
வினிஷா!
மணிசந்திரா!
அக்க்ஷயா!

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!