கோபிநாத் எங்க… நீங்க எங்க..? கரு பழனியப்பனை தூக்கியடித்த ஜீ தமிழ் – காரணம் இதுதான்!

Author: Shree
8 March 2023, 5:51 pm

பிரபல தனியார் தொலைக்காட்சிகளான விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் கடந்த சில நாட்களாகவே TRP யில் போட்டிப்போட்டுக்கொண்டு யார் பெருசு என முந்தியடித்தனர். அதில் வழக்கம் போலவே விஜய் டிவியை யாராலும் அசைக்க முடியவில்லை.

அப்படித்தான் நீயா நானா நிகழ்ச்சிக்கு போட்டியாக கரு. பழனியப்பன் ஜீ தமிழில் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சி மக்களால் பார்க்கப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் அவரது கருத்துக்களை மக்கள் விரும்பினாலும் காலப்போக்கில் அது கசப்பாகி அந்த மனுஷன் மீது வெறுப்பையும், கிண்டலையும் கக்கி வந்தனர்.

ஆம், கோபிநாத்துடன் இணைத்து கருபழனிப்பனின் பேச்சை கிண்டலடித்தனர் நெட்டிசன்ஸ். உதாரணம், ” சில நாட்களுக்கு முன்னர் நீயா நானா நிகழ்ச்சியில் சம்பாதிக்கும் மனைவிகள் மற்றும் அவரது கணவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இதில் கோபிநாத், படிக்க தெரியாத அப்பா ஒருவர் தன மகள் மீது வைத்திருக்கும் அளவுகடந்த பாசத்தை மேடையில் வெளிப்படுத்தினார். அதிலும் ‘ஆனந்தமாக வாழ அறிவாக இருக்க அவசியம் இல்லை’ என்ற வசனத்திற்கு கைதட்டல் அரங்கமே அதிர்ந்தது.

இதெல்லாம் பார்த்து கரு. பழனிப்பன் வேஸ்ட் என்றும் அரசியல் கருத்தை முன்வைத்தே பிழைப்பை ஓட்டுகிறார் என ட்ரோல் செய்தனர். அதற்கு முடிவு கட்டிய கரு. ப நேற்று தனது ட்விட்டரில் “

ஜீ தமிழ் உடனான நான்கு வருட” தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.!சமூகநீதி,சுயமரியாதை,திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! என கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!