என்னை எதுக்கு வேள்பாரி நிகழ்ச்சிக்கு கூப்பிட்டீங்க.. கமல்ஹாசனை கூப்பிட்டிருக்கலாம் : ஈகோ இல்லாத ரஜினி!
Author: Udayachandran RadhaKrishnan12 July 2025, 10:46 am
மதுரை எம்பியும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல். இந்த நாவலை படித்து பார்த்த இயக்குநர் ஷங்கர் இதை படமாக எடுப்பதாகவும், அதற்கான உரிமத்தையும் பெற்றுள்ளார்.
இந்த படத்தில் யார் யார் நடிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறயுள்ள நிலையில், ஷங்கர் சொதப்பாமல் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் வீரயுக நாயகன் வேள்பாரி நாவல் அதிக பிரதிகள் விற்றது தொடர்பாக வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் ஷங்கர், நடிகர் ரஜினி பங்கேற்றனர்.
இதில் பேசிய ரஜினி, இந்த விழாவுக்கு சிவக்குமாரை அழைத்திருக்கலாம், அவர் 6 மணி நேரம் மகாபாரதத்தை பற்றி பேசுவார். அப்படி இல்லையயென்றால் கமல்ஹாசனை அழைத்திருக்கலாம். அவர் அறிவாளி, 75 வயதிலும் கூலிங் கிளாஸ் போட்டு ஸ்லோ மோஷனில் நடந்து வரும் என் அழைத்திருக்கிறார்கள் என்றுதான் நினைக்கப்போகிறார்கள்.
என்னை சு வெங்கடேசன் அழைத்து வேள்பாரி ஒரு லட்சம் பிரதி விற்றுவிட்டது. அதற்கானவிழாவுக்கு நீங்கள் வந்தால் மகிழ்ச்சி, உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை, உங்கள் விருப்பம் என சொன்னார்.
He is 75 now Best orator when comes to stage speeches . The way he kept audience engaging 🔥🔥🔥
— Suresh balaji (@surbalutwt) July 11, 2025
Ultimate hilarious fun mode 😂😂
Mr . Rajinikanth 😂
Kamalhaasan elevation 🔥
Sivakumar ayya elevation 🔥
Dmk function 😂😂
Cooling glass slow motion 😂
Why I’m chief for this… pic.twitter.com/plbtMjBLQO
நான் இன்னும் வேள்பாரி படிக்கவே இல்லையே என கூற, கதை சொல்ல ஒருவரை அனுப்பி வைக்கிறேன் என கூறினார். நானோ வேண்டாம், என கொஞ்சம் மட்டும் படித்தேன் என ரஜினி பேசினார். ரஜினியின் பேச்சு இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், ஈகோ இல்லாத மனிதன் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
