சம்பளமே இல்லை; அட்வான்ஸ் கூட கொடுக்கலை- ஹாலிவுட் பட வாய்ப்பு? ஃபகத் ஃபாசில் ஓபன் டாக்…

Author: Prasad
18 August 2025, 7:22 pm

நடிப்பு அரக்கன்

நடிப்பு அரக்கன் என்று பெயர் பெற்ற ஃபகத் ஃபாசில் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் அவர், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் சமீபத்தில் வடிவேலுவுடன் “மாரீசன்” திரைப்படத்தில் நடித்திருந்தது பலரின் பாராட்டுக்களை பெற்றது.

Why fahadh faasil rejected the hollywood movie chance 

ஹாலிவுட் பட வாய்ப்பு

இதனிடையே ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் இயக்குனரான அலெஹான்ட்ரோ இனாரிட்டு என்பவர் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அலெஹான்ட்ரோ இனாரிட்டு தன்னுடைய “தி பேர்ட் மேன்”, “தி ரெவனன்ட்” ஆகிய திரைப்படங்களுக்காக ஆஸ்கர் வாங்கியவர். இவர் டாம் குரூஸை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். அத்திரைப்படத்தில்தான் ஃபகத் ஃபாசில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஃபகத் ஃபாசில் இத்திரைப்படத்தில் இருந்து வெளியே வந்துவிட்டதாக கூறியுள்ளார். 

Why fahadh faasil rejected the hollywood movie chance 

ஏன் வெளியேறினேன்?

இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஃபகத் ஃபாசில், “ஆடிஷனுக்கு பிறகு அந்த இயக்குனருக்கு என்னை பிடிக்கவில்லை. என்னுடைய ஆங்கில உச்சரிப்புதான் அதற்கு காரணம். ஆதலால் என்னை 4 மாதங்கள் அமெரிக்காவில் சம்பளமே இன்றி தங்க சொன்னார்கள். இந்த படத்துக்காக அட்வான்ஸ் கூட கொடுக்கவில்லை. ஆதலால்தான் அந்த படத்தில் இருந்து வெளியேற முடிவு செய்தேன். மேலும் அந்த ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கான எந்த ஒரு உந்துதலும் எனக்குள் ஏற்படவில்லை” என கூறியுள்ளார். இவரது பேட்டி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!